Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மதுரை கோயில்களில் கந்த சஷ்டி விழா; திருக்கல்யாண வைபவம்! - தினசரி

மதுரை கோயில்களில் கந்த சஷ்டி விழா; திருக்கல்யாண வைபவம்! - தினசரி

காரியாபட்டி முக்குரோடு ஶ்ரீ மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா திருக்கல்யாண வைபவம்

விருநுநகர் காரியாபட்டியில், கந்த சஷ்டி விழா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி முக்குரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் சன்னதியில் விழாவினை முன்னிட்டு, தினமும் காலை மாலை இரண்டு வேலைகளில் அபிஷேகம் தீபாராதனை கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் வீதி உலா வந்து சுவாமி வீ பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதனைத் தொடர்ந்து, விழாவின் நிறைவு நாளான ஸ்ரீ பாலமுருகனுக்கும் தெய்வானை வள்ளிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீ பாலமுருகனுக்கும் உற்சவர் முருகன் சிலைக்கும் திருமஞ்சனம், மஞ்சள், அரிசிமாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், தினைமாவு, கரும்புச்சாறு, மாதுளைச் சாறு, சாத்துக்குடி சாறு, திராட்சை சாறு, எலுமிச்சை சாறு, அருகம்புல் சாறு, அத்தி பூசாறு, ஆவாரம்பூ சாறு, நன்னாரி, விபூதி, சந்தனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, யாகசாலையில் பூஜையில் வைக்கப்பட்ட கலசங்கள் மற்றும் திருமண சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பின்பு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு வகையான வண்ண மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்பு பட்டாடையில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பாலமுருகன் சுவாமியின் இருபுறமும் தெய்வானை வள்ளி திருமணக் கோலத்தில் காட்சியளிக்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த வள்ளி தெய்வானை சமேத பாலமுருகனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து மனமுருகி தரிசனம் செய்தனர்.


தென்கரை கோயிலில் திருக்கல்யாணம்

சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத திருமூலநாத சாமி கோவிலில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத திருமூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது திருக்கல்யாணத்தை முன்னிட்டு மாலை 5 மணி அளவில் கோவில் முன்பாக மணமேடை அமைக்கப்பட்டு பெண்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர்.

தொடர்ந்து திருக்கல்யாண மகாயாகம் நடைபெற்றது சிவாச்சாரியார் கண்ணன்என்ற பரசுராமன் முருகப்பெருமானாக மாப்பிள்ளை வீட்டாராகவும் கணேசன் பட்டர் தேவசேனாவாக
விக்னேஷ் வள்ளியாக பெண் வீட்டார் ஆகவும் இருந்தனர் வேதபாராயணம் பிரசாந்த் சர்மா பூஜைகள் செய்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

அர்ச்சகர் செந்தில் உள்ளிட்டோர் பூஜைகள் செய்தனர் பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று
தீபாராதனை காட்டப்பட்டது திருக்கல்யாண வைபவத்தில் தென்கரை சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000ற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருள் பெற்று சென்றனர்.

தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் கந்தசஷ்டி விழா குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர். காடுபட்டி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தென்கரை ஊராட்சி சார்பில் குடிநீர் உள்ளிட்ட சுகாதார ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

Posts by ரவிச்சந்திரன், மதுரை:

விருநுநகர் காரியாபட்டியில், கந்த சஷ்டி விழா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி முக்குரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் சன்னதியில் விழாவினை முன்னிட்டு, தினமும் காலை மாலை இரண்டு வேலைகளில் அபிஷேகம் தீபாராதனை கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் வீதி உலா வந்து சுவாமி வீ பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari