Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மதுரை கோயில்களில் தை பூசம்; சிறப்பு பூஜைகள்!

மதுரை கோயில்களில் தை பூசம்; சிறப்பு பூஜைகள்!

துரை மாவட்ட கோயில்களில் தைபூசத்தையொட்டி, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி, அழகர் கோவில் பழமுதிர் சோலை முருகன் கோயில், மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயம், மதுரை பாண்டி கோயில் ஜெ.

ஜெ. நகர் வர சக்தி விநாயகர், மதுரை தாசில்தார் நகர் வரசித்தி விநாயகர், மதுரை அண்ணாநகர், வைகை காலனி வைகை விநாயகர், வைகை காலனி கிழக்கு சக்தி மாரியம்மன், மதுரை தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயங்களில், பக்தர்களால், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கரிக்கப்பட்டு, அர்ச்சணைகள், பிரசாதம் வழங்கப்பட்டது.

சௌபாக்கிய விநாயகர் கோவிலில், கோயில் நிர்வாகம் சார்பில், பிரசாதங்களை, கோயில் நிர்வாகிகள் வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்தனர்.


வேல்முருகன் கோயிலில் தை பூசம்:

மதுரை மாவட்டம், பாலமேட்டில் கஜேந்திரன் வளாகத்தில், அமைந்துள்ள ஸ்ரீ வேல்முருகன் கோவிலில் தைப்பூசம் 52 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பாலமேடு பழனி பாதயாத்திரை குழு குருநாதர் பாலமேடு பேரூராட்சி முன்னாள் தலைவர் கஜேந்திரன் தலைமையில் சாதுக்களுக்கு வேஷ்டி ,பழம் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக , காவடி எடுத்து ஊர்வலம் மாக வந்தனர். இதில், முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .


கொண்டையம்பட்டி வயித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் கோவிலில் தைப்பூச விழா!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் வயித்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வயியித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் திருக்கோவிலில் 16ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நடைபெற்றது

ALSO READ:அந்த 8 பெட்டி வந்தே பாரத் ரயிலை 'இங்கே' இயக்கலாமே!

திருவிழாவை முன்னிட்டு கடந்த நாலாம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பறவை காவடி பால்குடம் இளநீர் காவடி எடுக்கும் நிகழ்ச்சி காலை 10 மணிக்கு கொண்டையம்பட்டி மந்தை திடலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள வயித்துமலை அடிவாரத்தில் உள்ள வயித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்

வழிநெடுக கிராம மக்கள் சர்பத் மோர் இளநீர் தர்பூசணி உள்ளிட்ட குளிர் பானங்கள் மற்றும் பழங்களை பொதுமக்களுக்கு வழங்கி தாகத்தை தனித்தனர் சுமார் ஒரு மணி நேர பாதயாத்திரைக்குப் பின்பு வயித்து மலை அடிவார கோவிலுக்கு வந்தடைந்த பக்தர்கள் சிவசுப்பிரமணியனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

ஊர்வலத்தில் பெண்கள் இளநீர் காவடி எடுத்தும் வேல் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சாமியாடி ஊர்வலமாக சென்றனர் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தைப்பூச விழாவை தொடங்கி வைத்தவர்கள் மதியழகன் ஆர் கே பி குமார் முனியாண்டி சேகர் முருகன் மற்றும் பால்குட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தவர்கள் முருகானந்தம் அனு மற்றும் முத்துராமலிங்கம் மாணிக்கம் சாந்தி மற்றும் பால்பாண்டி சுந்தரமூர்த்தி உள்பட விழா குழுவினர் செய்திருந்தனர்

ALSO READ:மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari