Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

#image_title

துரை மாநகரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் ஆலய திருக்குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) வைபவம் வருகின்ற 17.09.2026-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி மதுரை மாநகர், மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பேருந்துகள், இரயில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கும்பாபிஷேக விழாவினை காண வந்து செல்லக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருக்கோவிலுக்கு வந்து செல்வதற்கும் போக்குவரத்து இடையூறு இல்லாமல் சீரான போக்குவரத்தினை ஏற்படுத்தும் பொருட்டும் மதுரை மாநகர காவல்துறையின் சார்பில் விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் கீழ்க்காணும் வகையில் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வாகன போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தங்கள் தடை செய்யப்பட்ட சாலைகள் / இடங்கள்

அதன்படி 16.09.2026-ம் தேதி இரவு 10.00 மணி முதல் 17.09.2026-ம் தேதி இரவு வரை கோவிலை சுற்றிலும் உள்ள பகுதிகளான சித்திரை வீதிகள், ஆவணிமூலவீதிகள் மற்றும் மாசி வீதிகளில் ஆகிய வீதிகளில் எந்தவிதமான வாகனங்கள் செல்வதற்கோ நிறத்துவதற்கோ அனுமதி இல்லை. இவ்வீதிகள் அனைத்தும் (Zero Parking Zone) வாகன நிறுத்த அனுமதி இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடந்து செல்ல மட்டுமே இவ்வீதிகளில் அனுமதிக்கப்படுவர்கள்.

சரக்கு வாகனங்கள் செல்லும் மாற்று வழித்தடங்கள்

16.09.2026-ம் தேதி இரவு 10.00 மணி முதல் 17.09.2026-ம் தேதி இரவு 10.00 மணி வரை மதுரை நகருக்குள் எந்தவிதமான சரக்கு வாகனங்களும் வந்து செல்வதற்கு அனுமதி இல்லை.

இவ்வாகனங்கள் அனைத்தும் அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை, தனிச்சியம் அலங்காநல்லூர் சாலை மற்றும் கப்பலூர் சுற்றச்சாலை வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.

தனக்கன்குளம் சந்திப்பு, நாகமலை புதுக்கோட்டை சுற்றுச்சாலை சந்திப்பு, துவரிமான் சுற்றுச்சாலை சந்திப்பு, சமயநல்லூர் சுற்றுச்சாலை சந்திப்பு, அலங்காநல்லூர் செக்போஸ்ட், நத்தம் ரோடு செக்போஸ்ட், அழகர்கோவில் ரோடு செக்போஸ்ட் மற்றும் ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை சந்திப்பு ஆகிய இடங்களிலிருந்து மதுரை மாநகருக்குள் கனரக சரக்கு வாகனங்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து பேருந்துகள் செல்லும் மாற்று வழித்தடங்கள்

மார்கமாக 1) மாட்டுத்தாவணியிலிருந்து ஆரப்பாளையம் வழியாக திண்டுக்கல் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மதுரை நகருக்குள் செல்வதை தவிர்த்து பழமார்கெட் சந்திப்பு. மேலமடை சந்திப்பு, ஆவின் சந்திப்பு. வழியாக வைகை வடகரை சாலை, கபடி ரவுண்டானா, தத்தனேரி பாலம் மற்றும் அம்மா பாலம் வழியாக செல்லவேண்டும்.

  1. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மதுரை நகருக்குள் செல்வதைத் தவிர்த்து அம்மா பாலம், தத்தனேரி ரோடு, கபடி ரண்டானா வழியாக M.M.லாட்ஜ் சென்று வழக்கமான வழித்தடங்களில் செல்லலாம்.
  2. பாத்திமா கல்லூரி சந்திப்பிலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் கூடல்நகர் பாலம், ஆணையூர் ரோடு, அய்யர் பங்களா சந்திப்பு, மூன்றுமாவடி சர்வேயர் காலனி சந்திப்பு மற்றும் 120 அடி சாலை வழியாக செல்லவேண்டும்.
  3. திருப்பரங்குன்றம் சாலை மார்க்கத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையம் வரும் வாகனங்கள் அனைத்தும் பழங்காநத்தம் C2 ரவுண்டானா சந்திப்பிலிருந்து கென்னட் ரோடு சந்திப்பு சென்று 70 அடி ரோடு வழியாக எல்லீஸ் நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையம் வரை சென்று திரும்ப TB.ரோடு, காளவாசல் சந்திப்பு வழியாக திருப்பரங்குன்றம் சாலைக்கு செல்லலாம்.
  4. அருப்புக்கோட்டை ரோடு அவனியாபுரம் மற்றும் சிந்தாமணி ரோடு வழியாக தெற்குவாசல் சந்திப்பு மற்றும் பெரியார் நிலையம் வரக்கூடிய வாகனங்கள் வழக்கமான வழித்தடங்களில் வந்து செல்லலாம். கூட்ட நெரிசலை பொருத்து தேவைப்படும் பட்சத்தில் இவ்வாகனங்கள் அனைத்தும் ஜெயவிலாஸ் சந்திப்பில் திருப்பப்பட்டு ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு, TVS பாலம் வழியாக C2 ரவுண்டானா சென்று எல்லீஸ் நகர் தற்காலிக பேருந்து நிறுத்தம் வரை அனுமதிக்கப்படும்.
  5. PC.பெருங்காயம் சந்திப்பு மற்றும் விரகனூர் சந்திப்பிலிருந்து மதுரை நகரின் வழியாக பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மதுரை நகருக்குள் செல்வதை தவிர்த்து வைகை வடகரை மற்றும் தென்கரை குருவிக்காரன் சாலை வழியாக பெரியார் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லலாம்.
  6. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் மதுரை நகருக்குள் செல்வதை தவிர்த்து அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை வழியாக திருமங்கலம் செல்லலாம்.

இலகுரக வாகனங்கள் செல்லும் மாற்று வழித்தடங்கள்

  1. மாட்டுத்தாவணியிலிருந்து ஆரப்பாளையம் செல்லக்கூடிய பொதுமக்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், பெரியார் சிலை, தமுக்கம் ஆழ்வார்புரம் இரக்கம், வைகை வடகரை சாலை. கபடி ரவுண்டானா. தத்தனேரி பாலம் மற்றும் அம்மா பாலம் வழியாக செல்லவேண்டும்.
  2. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லக்கூடிய பொதுமக்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மதுரை நகருக்குள் செல்வதைத் தவிர்த்து அம்மா பாலம், தத்தனேரி ரோடு, கபடி ரண்டானா வழியாக MM.லாட்ஜ் சென்று வழக்கமான வழித்தடங்களில் செல்லலாம்.
  3. காளவாசல் சந்திப்பிலிருந்து அரசரடி சந்திப்பு, புது ஜெயில் ரோடு வழியாக கோரிப்பாளையம் அழகர் கோவில் சாலை மற்றும் மேலூர் சாலைக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மேயர் முத்து சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மன்னர் சிலை கருடர் பாலம் வழியாக LIC பாலம் சென்று கபடி ரவுண்டானா வழியாக செல்லவேண்டும்.
  4. அருப்புக்கோட்டை ரோடு அவனியாபுரம் மற்றும் சிந்தாமணி ரோடு வழியாக தெற்குவாசல் சந்திப்பு மற்றும் பெரியார் நிலையம் வரக்கூடிய பொதுமக்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஜெயவிலாஸ் சந்திப்பில் திருப்பப்பட்டு ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு, TVS பாலம் வழியாக C2 ரவுண்டானா சென்று எல்லீஸ் நகர் தற்காலிக பேருந்து நிறுத்தம் வழியாக செல்லலாம்.
  5. PC.பெருங்காயம் சந்திப்பு மற்றும் விரகனூர் சந்திப்பிலிருந்து மதுரை நகரின் வழியாக பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பொதுமக்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மதுரை நகருக்குள் செல்வதை தவிர்த்து வைகை வடகரை மற்றும் தென்கரை குருவிக்காரன் சாலை வழியாக பெரியார் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லலாம்.
  6. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து மதுரை நகரின் வழியாக திருமங்கலம் செல்லக்கூடிய பொதுமக்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை வழியாக திருமங்கலம் செல்லலாம்

கோபுரத்தின் மேல் தளத்திற்கு செல்ல அனுமதி சீட்டு வைத்திருக்கக்கூடிய நபர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் வழித்தடங்கள்.

அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு விழாவினைக் காண வருகை தரும் கோபுர மாடிக்குச் செல்லும் அனுமதி அடையாளச் சீட்டு வைத்துள்ளவர்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மேலக் கோபுர வாசலின் வழியாகச் செல்லவேண்டிய நபர்கள் வாகனங்களை மேல மாரட் வீதியிலும், கிழக்கு மற்றும் வடக்குக் கோபுர வாசல்களின் வழியாகச் செல்லவேண்டிய நபர்கள் வாகனங்களை கீழ மாரட் வீதியிலும் மற்றும் தெற்குக் கோபுர வாசலின் வழியாகச் செல்லவேண்டிய நபர்கள் தெற்கு மாரட் வீதியிலும் அவர்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லலாம்.

மாரட் வீதிகளின் வாகன நிறுத்தங்கள் நிறைவடைந்தால் மேற்கண்ட அனுமதி அடையாளச் சீட்டு வைத்துள்ளவர்களின் வாகனங்கள் வெளிவீதிகளில் நிறுத்த அனுமதிக்கப்படும்.

காவல்துறையினரின் வாகன அனுமதி அடையாளச்சீட்டு வைத்துள்ள முக்கிய நபர்களின் வாகனங்கள்

காவல்துறையினரின் வாகன அனுமதி அடையாளச்சீட்டு வைத்துள்ள மிக முக்கிய நபர்களின் வாகனங்கள் அண்ணா சிலையிலிருந்து வடக்கு மாசி வீதி. தளவாய் தெரு, வடக்கு ஆவணி மூல வீதி வழியாக மீனாட்சி சீருந்து வாகன நிறுத்தத்தில் நிறுத்தலாம். மேலும் காவல்துறையினரின் அனுமதி அடையாளச்சீட்டு வைத்துள்ள அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் அதிகாலை 5 மணி வரை மாசி வீதிகளில் நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். காவல்துறையினரின் அடையாள அட்டைச்சீட்டு இல்லாத வாகனங்கள் மாசி வீதிகளில் நிறுத்த அனுமதி இல்லை. மிக முக்கியஸ்தர்களின் வாகனங்களுக்கு மஞ்சள் நிற வாகன அனுமதி அடையாள சீட்டும் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு பச்சை நிற வாகன அனுமதி அடையாள சீட்டும் காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.

அவசரகால வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள்:

108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அவசர கால தேவைக்காக சென்று வரும் வகையில் கீழ்கண்ட தெருக்கள் அவசர கால வழியாக பயன்படுத்த திட்டமிடப்பட்டு அவைகள் (Sterile Zone) பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக கண்காணிக்கப்படும். இவ்வீதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் வாகனங்களில் செல்வதற்கோ நடந்து செல்வதற்கோ அனுமதி இல்லை.

  1. தளவாய் தெரு
  2. சென்டல் மார்க்கெட் தெரு
  3. தெற்கு காவல் கூட தெரு
  4. அன்னகுழி மண்டபம் தெரு

மேற்படி கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் அனைத்திற்கும் QR-code தயார் செய்யப்பட்டு அதன் Link Share செய்யப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வாகன நிறுத்தங்களை தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

i) இதில் சிவகங்கை, திருச்சி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கும்பாபிஷேக விழாவை காண வரும் பக்தர்களின் வாகனங்கள் விரகனூர் சுற்றுச்சாலை வழியாக வைகை தென்கரை சாலையில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் நிறுத்தம் செய்யவேண்டும்.

ii) விருதுநகர் மற்றும் திருமங்கலம் சாலை மார்க்கத்திலிருந்து திருப்பரங்குன்றம் சாலை வழியாக வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வாகனங்கள் தமிழ்நாடு பாலிடெக்னிக், மதுரை கல்லூரி, திடீர்நகர் காவல் நிலையம் எதிரே உள்ள மரக்கடை பின்புறம் உள்ள காலியிடம் மற்றும் பொரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள பலஅடுக்கு வாகன காப்பகம் ஆகிய இடங்களில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் தங்களது வாகனங்களை நிறத்திக் கொள்ளலாம்.

iii) தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வாகனங்கள் காளவாசல் பைபாஸ் ரோடு, பழைய RTO அலுவலகம் அருகில், அரவிந்த் மீரா பள்ளி சாலை, எல்லீஸ் நகர் சாலை, எல்லீஸ் நகர் மீனாட்சி கார் பார்க்கிங் அருகில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் தங்களது வாகனங்களை நிறத்திக் கொள்ளலாம்.

iv) மதுரையின் வடபகுதிகளான நத்தம் சாலை, அலங்காநல்லூர் சாலை, அழகர்கோவில் சாலை மற்றும் மேலூர் சாலையிலிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வாகனங்கள் தமுக்கம் மைதானம், காந்திமியூசியம், மீனாட்சி கல்லூரி வளாகம் மற்றும் அமெரிக்கன் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களிலும் வாகனங்ளை செய்யப்பட்டுள்ளன. நிறுத்துவதற்கு ஏற்பாடு

தற்காலிக பேருந்து நிலையங்கள்

v) மேற்படி கும்பாபிஷேக விழாவினை காண பேருந்துகளில் வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக மதுரை மாநகரில் i) C2.ரவுண்டானா ii) எல்லீஸ் நகர் iii) TB.ரோடு வெஸ்டன் பார்க் ஹோட்டல் அருகில் உள்ள இரயில்வே மேற்கு வாயில் iv) அண்ணா பேருந்து நிலையம் மற்றும் v) தெப்பக்குளம் ஆகிய 4-இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியார் பேருந்து நிலையத்தில் வாகன பெருக்கத்தின் காரணமாக பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மேற்படி தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படுத்தப்படும்.

vi) இரயில் மார்க்கமாக மேற்படி கும்பாபிஷேக விழாவினை காண வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மதுரை இரயில் நிலையத்திலிருந்து நேராக டவுன்ஹால் ரோடு வழியாக நடந்து சென்று மே-பிளவர் சந்திப்பு வழியாக மேல ஆவணி மூலவீதி சென்று விழாவை காணலாம்.

பொதுமக்கள் கோபுர தரிசனம் செய்வதற்கு நடந்து செல்லும் வழித்தடங்கள்

  1. கிழக்கு கோபுரம் யானைக்கல் சந்திப்பிலிருந்து கீழமாசிவீதி சென்று சுவாமி சன்னதி தெரு, வெங்கலகடை தெரு ஆகிய வீதி வழியாக சென்று கீழஆவணி மூலவீதி மற்றும் கீழக்கு சித்திரை வீதிக்கு செல்லாம்.
  2. தெற்கு கோபுரம்

கீழவாசல் சந்திப்பு வாசன் சந்திப்பிலிருந்து விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி சென்று மறவர் சாவடி சந்திப்பு, தொட்டியன் கிணற்று சந்து வழியாக தெற்கு ஆவணி மூலவீதி மற்றும் தெற்கு சித்திரை வீதிக்கு செல்லாம்.

  1. வடக்கு கோபுரம் - Old TVs, வடக்கு மாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பு, வடுக காவல் கூட தெரு தானப்ப முதலி தெரு வழியாக வடக்கு ஆவணி மூலவீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிக்கு செல்லாம்.
  2. மேற்கு கோபுரம் நேதாஜி ரோடு மற்றும் டவுன்ஹால் ரோடு வழியாக மேலமாசி வீதி சென்று மேல ஆவணி மூலவீதி மற்றும் மேற்கு சித்திரை வீதிக்கு செல்லாம்.

மேற்படி தற்காலிக போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்களும், பக்தர்களும் வியாபாரிகளும் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் ஆலய திருக்குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) வைபவம் எவ்வித சிரமமின்றி சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரைமாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari