Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

நடத்தையில் சந்தேகம். நடந்த சண்டை. மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

சாத்தூர் அருகே மனைவி குத்தியதில் கணவர் உயிர் இழந்தார்; நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் கணவர் உயிரிழந்தது சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தில் ஆர்.சி தெரு சேர்ந்த சாமி என்பவரது மகன் மணி (வயது 34) . இவர் அருகிலுள்ள பகுதியில் தனியார் அட்டைக் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். மணி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள அப்பனேரி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் திவ்யபாரதி (24) ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து இருவரும் சலராபுரத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து 8 ஆண்டுகளாக இருவருக்கும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் திவ்யபாரதிக்கு வேறு ஒருவருடன் தெடர்பு இருப்பதாக சந்தேகத்தின்பேரில் மணி தினமும் குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போலே இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதில் திவ்யபாரதி தள்ளிவிட்டதில் மணி வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. சமபலம் குறித்து தகவலறிந்த சாந்தூர் தாலுகா போலீசார் சம்பல இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரதே பரிசோதணைக்கு விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மணியின் மனைவி திவ்யபாரதியை நடத்திய குறுக்கு விசாராணையில் திவ்யபாரதி சண்டையின் போது மணியை பாத்ரூமில் தள்ளி விட்டுவிட்டு கத்தியை எடுத்து மணியின் தொடையில் குத்தியதும் அதிலிருந்து வெகு நேரம் இரத்தம் வெளியேறியதால் மணி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

ALSO READ:விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

இதனையடுத்து சாத்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராமராஜ் தலைமயிலான போலீசார் திவ்யபாரதியை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari