Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

#image_title

ள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

தாம்பரம் — தென்காசி/செங்கோட்டை,சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி ,
ஈரோடு — சென்னை போத்தனூர், போத்தனூர் சென்னை இன்டர்சிட்டி ஆகிய 4 வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் நாளை வியாழக்கிழமை ஏப்ரல் 30 அன்று புறப்பட இருக்கிறது . மேலும் தொடர் விடுமுறை முடிந்து ஞாயிறு சென்னை நோக்கி வர இந்த நான்கு ரயில் இருக்கிறது.

இந்த வழித்தடத்தில் பயணிக்கும் மக்கள் இந்த ரயில்களை பயன்படுத்திக் கொள்ளலாம் .

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏப்ரல் 30 காலை 08:00 மணிக்கு துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

ஈரோடு சென்னை போத்தனூர் சிறப்பு ரயில் முன்பதிவு மட்டும் இன்று 6 மணிக்கே துவங்கி நடைபெற்று வருகிறது.

தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம்:

வண்டி எண் 06089 - தாம்பரம் - தென்காசி தாம்பரத்தில் இருந்து ஏப்.30 வியாழன் இரவு 10.30க்கு கிளம்பி, தென்காசிக்கு மறு நாள் காலை 10 மணிக்கு வந்து சேரும்.

ALSO READ:சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

வண்டி எண் 06090 - செங்கோட்டை- தாம்பரம் ரயில், செங்கோட்டையில் இருந்து மே 3ம் தேதி இரவு 9.30க்கு புறப்பட்டு, தாம்பரத்துக்கு மறு நாள் காலை 10.30க்கு சென்றடையும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari