Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரயில்வேயில் அப்ரென்டிஸ் வேலை வேணுமா?: இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு!

ரயில்வேயில் அப்ரென்டிஸ் வேலை வேணுமா?: இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு!

தெற்கு ரயில்வேயில் பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், பிளம்பர், டீசல் மெக்கானிக், பெயின்டர், வயர்மேன், எலக்ட்ரீசியன், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

10ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு; மொத்தம் 2,438 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.,12ம் தேதி. இன்னும் 3 நாட்கள் மட்டும் உள்ளன.

தெற்கு ரயில்வேக்கு உட்பட சென்னை, கோவை, திருச்சி, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு கோட்டம், பெரம்பூர், அரக்கோணம் பணிமனை உள்ளிட்ட இடங்களில், 2,438 தொழில் பழகுநர் (apprentice) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி என்ன?

இந்த பயிற்சி இடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும் எம்.எல்.டி., பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது

விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் ஆகஸ்ட் 12.

விண்ணப்பிக்க கட்டணம்

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்.சி, எஸ்.டி., மற்றும் மகளிர் ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரம்யா ஸ்ரீ

See Full Bio

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari