Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல் திங்கட்கிழமை காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயமடைந்தனர்.

  • சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த எக்ஸெல் பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பட்டாசு ஆலை தரைமட்டமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இந்த விபத்தில் பாண்டி மற்றும் ரவி என்ற இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலையின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு அதிகாரிகளின் நெருக்கடி அதிகமாக உள்ள காரணத்தால் தான் தொழிலாளர்களை அவசர படுத்தி வேலை வாங்கும் சூழ்நிலையால் தான் இது போன்ற பட்டாசு ஆலை வெடிவிபத்து நடப்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது-சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தை நேரில் பார்வையிட்ட பின் பாஜக மாநிலத்தலைவரும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான எக்ஸெல் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் தாயில்பட்டியை சேர்ந்த பாண்டி என்ற தொழிலாளி உடல்கருகி பலியானார்.மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் 5 தொழிலாளர்கள் லேசான காயமுடன்
மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிசணைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் வெடிவிபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு பாஜக மாநிலத்தலைவரும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இது போன்ற பட்டாசு விபத்து நடந்ததை முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறேன் என்றும் இந்தப் பகுதி வானம் பார்த்த பூமி, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமே பட்டாசு தொழிலை நம்பி தான் உள்ளது என்றும் அரசு அதிகாரிகளின் நெருக்கடி அதிகமாக உள்ள காரணத்தால் தான், தொழிலாளர்களை அவசரப்படுத்தி வேலை வாங்கும் சூழ்நிலையால் தான் இது போன்ற விபத்து நடப்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அரசு அதிகாரிகள் எடுக்கக்கூடிய தீவிர நடவடிக்கையும் இதற்கு ஒரு காரணம் என்றும் அரசு அதிகாரிகள் பட்டாசு தொழிலாளர்களை துன்புறுத்துவதாக தான் நான் நினைக்கிறேன் இந்தப் பகுதியில் இத் தொழிலை விட்டால் மக்களுக்கு வேறு தொழில் கிடையாது. இதனால் மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இதுபோன்ற தொந்தரவுகளை அதிகம் செய்யக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.இதுகுறித்து சட்டமன்றத்தில் நான் பேசுவேன் என்றும் இதுபோன்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து நடக்கும் போது காயம் அடைந்தவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது இது போன்று அவசரமாக செல்லும் நிலையில் சிவகாசியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உள்ளது அதனால் வெம்பக்கோட்டை பகுதியிலேயே சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையை கொண்டு வர நான் முயற்சிப்பேன் குரல் கொடுப்பேன் என்றார். அரசு அதிகாரிகள் பட்டாசு ஆலை தொழிலாளர்களை நிம்மதியாக வேலை பார்க்க விட வேண்டும் ஆலை உரிமையாளர்களையோ தொழிலாளர்களையோ விரைவு படுத்த அவர்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளக்கூடாது அரசு இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் ஆவது நிதி உதவி வழங்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் நான் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்றும் முதல் வருடம் கூறி கண்டிப்பாக உரிய நிதி உதவியை பெற்றுக் கொடுப்பேன் சாத்தூர் தொகுதியை பொருத்தமல்லி சபிக்கப்பட்ட தொகுதியாக தான் நான் நினைக்கிறேன். நான் வந்தபோது மிக மோசமாக இருந்ததை உணர்ந்தேன் குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் இல்லை சாலை வசதி இல்லை கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை இந்த நேரத்தில் அரசை நான் குற்றம் சாட்ட விரும்பவில்லை வரும் காலத்தில் என்ன தேவையோ அதை செய்து கொடுப்பேன் என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari