Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
செந்தூரில் முதல்வருக்கும் அமைச்சருக்கும் அரோஹரா போட்ட வர்ணனையாளர் மீது புகார்! - தினசரி

செந்தூரில் முதல்வருக்கும் அமைச்சருக்கும் அரோஹரா போட்ட வர்ணனையாளர் மீது புகார்! - தினசரி

திருச்செந்தூர் சூரசம்கார நேரலையில் தமிழக முதல்வருக்கு அரோகரா இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருக்கு அரோகரா என முருகனின் புனித அரோகரா மந்திரத்தை கொச்சைப்படுத்தி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்திய வர்ணனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமுன்னணி காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் திருநெல்வேலி காவல் ஆணையாளருக்கு அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது…

'நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். இன்று 15.11.2026 சஷ்டி விரதம் முடித்து எனது வீட்டில் இரவு சுமார் 7:00மணிக்கு சமூக வலைதளங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹார வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.

அதில் சூரசம்காரத்தை ஒலிபெருக்கியில் நேரலையாக பேசி பாடியவர்களில் ஒரு குழுவினர் 'தமிழக முதல்வருக்கு அரோகரா , இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருக்கு அரோகரா' என கோஷமிட்டுள்ளனர் இது மிகுந்த வேதனைக்குரியதாகும் அரோகரா என்பது முருகப்பெருமானை பக்தியோடு இந்துக்கள் போற்றி துதிக்கும் புனிதமான மந்திர சொல்லாகும். அந்த மந்திரச் சொல்லை தமிழக முதல்வருக்கு அரோகரா இந்து சமய அறநிலை துறை அமைச்சருக்கு அரோகரா என புனித மந்திரத்தை தெரிந்தே வேண்டுமென்று கொச்சைப்படுத்தி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தை காணொளியில் பார்த்த போது எனக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டது. எனது மத உணர்வுகளை புண்படுத்தியதாக மிகுந்த வேதனைக்கு உள்ளானேன் பலரும் இதுகுறித்து என்னிடம் பேசி சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என இந்த வேதனையோடு கூறினர்.

அரோகரா என்கின்ற புனித சொல்லை தனி நபர்களோடு தொடர்புபடுத்தி இழிவுபடுத்திய மேற்படி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'

Posts by Dhinasari Reporter:

திருச்செந்தூர் சூரசம்கார நேரலையில் தமிழக முதல்வருக்கு அரோகரா இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருக்கு அரோகரா என முருகனின் புனித அரோகரா மந்திரத்தை கொச்சைப்படுத்தி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்திய வர்ணனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமுன்னணி காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari