Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிலம்பு எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி!

சிலம்பு எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி!

#image_title

யணிகள் நலன் கருதி சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக் ப்பட்டுள்ளதாக தென்னக‌ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டி எண் 20681/20682 தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், 2 தூங்கும் வசதி பெட்டியும், ஒரு முன்பதிவு இல்லாத பொது பெட்டியும் வரும் 27.11.24 முதல் 30.01.25 வரை இணைக்கப்பட உள்ளது.

ஏற்கனவே 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயங்க இருக்கிறது.

இதனால் கூடுதலாக 500 பேர் வரை பயணம் செய்ய முடியும்.

இந்த ரயிலை நிரந்தரமாக தினசரி சென்னை எழும்பூர் செங்கோட்டை இடையே இயக்க பயணிகள் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari