Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

T20 WC 2026: இறுதிப் போட்டியில் இந்திய அணி!

ண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டிஅரையிறுதி ஆட்டங்கள் 05.03.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

முதல் அரையிறுதி ஆட்டம் 04.03.2026 அன்று கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

பூவாதலையா வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாடவந்த தென் ஆப்பிரிக்க அணியின் மட்டையாளர்கள் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறினார்கள். முதலிரண்டு விக்கட்டுகள் இரண்டாவது ஓவரில் விழுந்தன.

தொடக்க மட்டையாளர்கள் எய்டன் மர்க்ரம் (20 பந்துகளில் 18 ரன்), க்விண்டன் டி காக் (8 பந்துகளில் 10 ரன்), ரியன் ரிக்கிள்டன் (பூஜ்யம் ரன்), டேவிட் மில்லர் (6 பந்துகளில் 6 ரன்) என நிலைத்து ஆட்டமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். டிவால்ட் ப்ருவிஸ் (27 பந்துகளில் 34 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (24 பந்துகளில் 29 ரன்) மற்றும் மார்கோ யான்சன் (30 பந்துகளில் 55 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

இரண்டாவதாக ஆடவந்த நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணியின் டிம் செய்ஃபர்ட் (33 பந்துகளில் 58 ரன்), ஃபின் ஆலன் (33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன், 10 ஃபோர், 8 சிக்சர்) மற்றும் ரவின் ரச்சீந்திரா (11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 13 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி 12.5 ஓவர்களில் 173 ரன் எடுத்து நியூசிமாந்து அணியை 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். ஃபின் ஆலன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்தியா அபார வெற்றி

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் மட்டையாடவந்த இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (9 ரன்) இந்த ஆட்டத்திலும் குறைந்த ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் மூன்றாவது ஓவரில் ஒரு கேட்ச் கொடுத்து அவுட் ஆக இருந்தார்.

இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ப்ரூக் அந்த சுலபமான கேட்சை பிடிக்கத் தவறினார். அவர் 14ஆவது ஓவர் வரை விளையாடி 42 பந்துகளில் 89 ரன் அடித்தார். அதில் 8 ஃபோர்கள் 7 சிக்சர்கள். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடினர். இஷான் கிஷன் (18 பந்துகளில் 39 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), ஷிவம் துபே (25 பந்துகளில் 43 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) (இவர் சற்று முன்னதாக மட்டையாட அனுப்பப்பட்டார்), ஹார்திக் பாண்ட்யா (12 பந்துகளில் 27 ரன்), திலக் வர்மா (7 பந்துகளில் 21 ரன்)என அனைவருமே அதிரடியாக ஆடினர். சரியாக விளையாடாதவர், அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் (6 பந்தில் 11 ரன்) தான். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 253 ரன் எடுத்தது.

இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணி பில் சால்ட் (5 ரன்), ஜாஸ் பட்லர் (25 ரன்) மற்றும் ஹாரி ப்ரூக் (7 ரன்) ஆகியோரை பவர் பிளே ஓவர்களுக்குள் இழந்து 64 ரன் மட்டுமே எடுத்தது. ஜேகப் பெதல் (48 பந்துகளில் 105 ரன், 8 ஃபோர், 7 சிக்சர்) சிறப்பாக ஆடினார். 15 ஓவர்கள் வரை இங்கிலாந்து அணி சிறப்பாகவே ஆடியது.

ஆனால் கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி, இரண்டு விக்கட்டுகளையும் எடுத்து, ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தினர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 146 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர் வீசி 64 ரன் கொடுத்தார். இது ஒரு மோசமான சாதனையாகும். ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டார்.

இறுதி ஆட்டம் இந்தியம் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 0700 மணிக்கு நடைபெறும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari