Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டிஇறுதி ஆட்டம் 08.03.2026
அதிரடி வெற்றி - கோப்பையை வென்ற இந்திய அணி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் பல சந்தேகங்கள்.

  • இதுவரை எந்த அணியும் மூன்றாவது முறை டி20 கோப்பையை வென்றதில்லை.
  • சொந்த மண்ணில் எந்த அணியும் கோப்பையை வென்றதில்லை.
  • அகமதாபாத் இந்தியாவிற்கு ஒரு ராசி இல்லாத மைதானம்; .ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை கோட்டை விட்ட மைதானம்
  • நடப்பு டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியுற்ற ஒரே ஒரு ஆட்டம் அகமதாபாத் மைதானத்தில் நடந்தது.
  • டி20 உலக கோப்பைகளில் இதுவரை இந்திய அணி நியூசி., அணியை வென்றது இல்லை.
  • டி20 உலக கோப்பைகளில் இதுவரை தொடரை நடத்திய நாடு கோப்பையை வென்றதில்லை.
  • நடப்பு சாம்பியன் அணி தொடர்ந்து கோப்பையை வென்றதில்லை.
  • ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து ஐசிசி இறுதிப் போட்டியிலும் இந்தியா தோல்வியை தான் சந்தித்தது

உலகக் கோப்பை டி20 ஆட்டங்களுக்கு முன்னர் நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியை அடித்து துவைத்தது நியூசிலாந்து அணி. மேலும் அகமதாபாத் மைதானத்தில் இதற்கு முந்தைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்திய அணி தோற்றது. எனவே கோப்பையை இந்திய அணி ஜெயிப்பது சந்தேகம் என்பதுதான் பலருடைய கருத்தாக இருந்தது.

அதற்கு ஏற்றாற்போல இந்திய அணி தான் வழக்கமாகத் தங்கும் ஓட்டலை மாற்றியது. அபிஷேக ஷர்மாவை தொடக்க வீரராக இறக்கலாமா வேண்டாமா என சமூக வலைத்தளங்களில் பல விவாதங்கள். வருண் சக்ரவர்த்தி என்ன விதமாக பந்துவீசவேண்டும் என பல ஆலோசனைகள்.

ALSO READ:திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இந்தக் குழப்பமெல்லாம் முதல் ஆறு ஓவர் வரைகள் மட்டுமே. ஆட்டத்தின் 10ஆவது ஓவர் வீசப்படும்போது இந்திய அணி வெற்றி பெறும் என்பதில் இருந்த ஐயங்கள் பறந்தோடின.

பூவா - தலையா வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அதிரடி மட்டையாளர்களைக் கொண்ட இந்திய அணியை முதலில் மட்டையாடச் சொல்வது என்ன விதமான லாஜிக் எனத் தெரியவில்லை.

ஒரு வேளை தனது பந்து வீச்சால் இந்திய அணியை 100 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்துவிடலாம் என அந்த அணி எண்ணியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததென்னவோ அப்படியே தலைகீழாக.

இந்திய அணியின் மட்டையாளர்கள் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார்கள். தொடக்க வீரர்கள் அபிஷேக ஷர்மா (21 பந்துகளில் 52 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் சஞ்சு சாம்சன் (46 பந்துகளில் 89 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) இருவரும் அதிரடியாக ஆடினர். நாலாவது ஓவர் முடிவில் இந்திய அணி 50 ரன்கள் அடித்திருந்தது. பவர்பிளே முடிவில், அதாவது 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்திருந்தது.

சாம்சனுடன் இணைந்த இஷான் கிஷன் (25 பந்துகளில் 54 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) வேகமாக ரன் சேர்த்தார். அணி 7.2 ஓவர்களில் 100 ரன், 11.3 ஓவர்களில் 150 ரன் சேர்த்திருந்தது. இந்த நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டது. இதற்குப் பிறகு நியூசிலாந்து அணியின் பந்துவீ ச்சாளர்கள் அதிக ரன் கொடுக்காமல் பந்து வீசினர். கடைசி ஓவரில் ஷிவம் துபே முதல் பந்தில் ஃபோர், இரண்டாவது மூன்றாவது பந்துகளில் சிக்சர்கள், நாலாவது பந்திலும், ஆறாவது பந்திலும் ஃபோர்கள் அடித்ததால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 25 5ரன் எடுத்தது.

ALSO READ:பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

இரண்டாவதாக ஆடவந்த நியூசிலாந்து அணியில் டிம் செய்ஃபெர்ட் (52 ரன்), டரில் மிட்சல் (17 ரன்) மற்றும் மிட்செல் சாண்ட்னர் (43 ரன்) ஆகியோர் மட்டுமே இரட்டையிலக்க ரன்கள் அடித்தனர். பிறர் சரியாக ஆடவில்லை. இந்திய பந்து வீச்சாளர்களில் பும்ரா சிறப்பாகப் பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசி 15 ரன் கொடுத்து 4 விக்கட்டுகள் வீழ்த்தினார். அக்சர் படேல் (3 ஓவர்கள், 27 ரன், 3 விக்கட்டுகள்) சிறப்பாக பந்துவீசிய மற்றொரு பந்துவீச்சாளர்.

இஷான் கிஷன் மூன்று கேட்சுகளும் திலக் வர்மா இரண்டு கேட்சுகளும் பிடித்தனர். மொத்தத்தில் இந்திய அணி அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக விளையாடியது. ஜஸ்பிரீத் பும்ரா ஆட்ட நாயகனாகவும் சஞ்சு சாம்சன் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்கள்.

உலகக்கோப்பை நாயகன் ஜஸ்ப்ரீத் பும்ரா!

டி 20 கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களின் சொர்க்கம் என்பதாக மாற்றி விட்டார்கள். பிட்ச் அதற்கேற்ப அமைத்து சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்குமாறு கிரிக்கெட்டை குழப்பி வைத்திருக்கும் நிலையில் பந்துவீச்சாளர்களின் நிலை பரிதாபம். போதாக்குறைக்கு பவர்பிளே ஓவர் என்று இரண்டு பேருக்கு மேல் வெளி வட்டத்தில் இல்லாத விதி வேறு. நோ பால் வீசினால் ஃப்ரீ ஹிட்!

பிட்ச்சும் சரி ஆட்ட விதிகளும் சரி, பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை. இந்த நிலையில் எந்த பிட்ச்சாக இருந்தாலும் சிறப்பாக பந்து வீசுகிறார் ஜஸ்ப்ரீத் பும்ரா! சரியான அளவில் ஆஃப் ஸ்டிக் நோக்கி வீசுவது, கொஞ்சம் திரும்ப வைத்து லெக் ஸ்டம்ப் நோக்கி தாக்குவது, சரியான அளவில் போட்டு பேட்ஸ்மேன் தூக்கி அடிக்கத்தூண்டி கேட்ச் ஆக வைப்பது, யார்க்கர் போட்டு ஸ்டம்ப்பை தகர்ப்பது, ஒரு பவுன்சர், அப்படியே ஒரு ஸ்லோ பவுன்சர், ஸ்லோ பால் யார்க்கர் இப்படி, விதவிதமாக பந்து வீசி, பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைக்கிறார்.

ALSO READ:10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

விக்கெட் இழக்காமல் இருந்தால் போதும் என்று பேட்ஸ்மேன் நினைத்தால், ரன்கள் வராமல் சிக்கனமாக பந்து வீச்சு இருக்கும். அதன் விளைவு விக்கெட் விழாவிட்டாலும் பிரஷரை ஏற்றி விட்டு அடுத்த பவுலரை அட்டாக் செய்யப் போய் விக்கெட் விழ உதவியாக இருப்பது என்று தனது பங்களிப்பை அசத்தலாகச் செய்கிறார் பும்ரா.

பந்து வீச்சில்தான் ஆக்ரோஷம், ஆனால் இவர் முகத்தில் எப்போதும் தவழும் புன்னகை. தன் பந்தில் யாராவது கேட்ச் மிஸ் செய்தாலும், பீல்டிங்கில் தவறு செய்தாலும், அதற்காக தன் கோபத்தையோ வருத்தத்தையோ வெளிப்படுத்தாமல் வெறும் ஒரு புன்னகையுடன் அடுத்த பந்தை வீச தயாராகிவிடுவார். இத்தகைய அவரது உறுதியான தன்மையே அவருக்கு மேன் ஆஃப் த மேட்ச், மேன் ஆஃப் த சீரிஸ் என்று பல விருதுகளை அள்ளித் தருகிறது.

இப்போதும் கூட, இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணம் இந்த புன்னகைப் புயல் ஜஸ்பிரிட் பூம்ரா தான்!

இதுவரை டி 20 கோப்பை வென்ற நாடுகள்!

வருடம்வெற்றிரன்னர்நடத்திய நாடு
2007இந்தியாபாகிஸ்தான்தென் ஆப்பிரிக்கா
2009பாகிஸ்தான்இலங்கைஇங்கிலாந்து
2010இங்கிலாந்துஆஸ்திரேலியாமேற்கு இந்திய தீவுகள்
2012மேற்கு இந்திய தீவுகள்இலங்கைஇலங்கை
2014இலங்கைஇந்தியாவங்கதேசம்
2016மேற்கு இந்திய தீவுகள்இங்கிலாந்துஇந்தியா
2021ஆஸ்திரேலியாநியூசிலாந்துயுஏஇ, ஓமன்
2022இங்கிலாந்துபாகிஸ்தான்ஆஸ்திரேலியா
2024இந்தியாதென் ஆப்பிரிக்காயுஎஸ்ஏ, மேற்கு இந்திய தீவுகள்
2026இந்தியாநியூசிலாந்துஇந்தியா, இலங்கை
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari