Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

தகுந்த வைத்தியம் தேவை!

#image_title

ரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன நாய் இருந்தது. சொல்ல ஆரம்பித்தார்….

'என் நாய்க்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை இருக்கிறது. என் நாய் மிகவும் கீழ்ப்படியாமல் போய்விட்டது; நான் மிகவும் நல்ல உணவளித்து
நன்றாக கவனிக்கிறேன். ஆனால் அது என்னை மதிக்கவில்லை. நான் அதை என் அருகில் அழைத்தால், அது ஓடிவிடும். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள். நான் அதை மிகவும் நேசிக்கிறேன். அதன் அலட்சிய போக்கை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை' என்றார்.

டாக்டர் நாயைக் கூர்ந்து பார்த்தார். பதினைந்து நிமிடம் ஆராய்ந்துவிட்டு சொன்னார், 'இந்த நாயை ஒரு இரவு என்னுடன் விட்டு விடுங்கள். நான் அதை கவனிப்பதன் மூலம் சிகிச்சை செய்வேன்.'

அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்.

மருத்துவர் தனது உதவியாளரை அழைத்து…அதை எருமை மாடுகளுடன் கட்டி, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் மட்டும் கொடுத்து, தோல் பெல்ட்டால் அடிக்கச் சொன்னார். மருத்துவரின் உதவியாளர் இரவு முழுவதும், டாக்டர் சொன்னபடியே சிகிச்சை செய்துகொண்டிருந்தார்.

மறுநாள் அந்த பெண்மணி வந்து கேட்டார்.

'ஐயா என் நாய்க்குட்டி எப்படி இருக்கு ?

டாக்டர் சொன்னார், 'உங்கள் நாய்க்குட்டி நீங்கள் இல்லாத குறையை உணர்ந்து விட்டது என்று நம்புகிறேன்.'

டாக்டரின் உதவியாளர் நாயை அழைத்து வந்தார். நாய் அறைக்குள் வந்தவுடன்.. துள்ளிக் குதித்து மேடத்தின் மடியில் அமர்ந்து, வாலை அசைத்து, மேடத்தின் முகம், வாயை நக்க ஆரம்பித்தது.!! அவருக்கு மிகுந்த சந்தோஷம்.

மேடம் சொல்ல ஆரம்பித்தார்: திடீர்னு இந்த மாதிரி பாசக்காரனா மாறிட்டானே ? என்ன பண்ணீங்க சார்?

டாக்டர் கூறினார்: பெரிய ஏர் கண்டிஷனர் அறையில், தினமும் மிகவும் சுவையான உணவை சாப்பிட்டுவிட்டு, தன்னையே மாஸ்டர் என நினைத்து, தன் உரிமையாளரை மறந்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாகப் புரியும் உளவியல் மற்றும் உடல் சிகிச்சை தேவைப்பட்டது. கொடுத்தோம், இப்போது அது நலமாக உள்ளது.

சுருக்கம்:

நாட்டிற்குள்ளும் சிலருக்கு தேவை இந்த சிகிச்சை:
1) அன்னை பாரதத்தை அவமரியாதை செய்தல்,
2) இந்தியாவை துண்டு துண்டுகளாக்குவோம் என்று மிரட்டுவது,
3) சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து சுதந்திரம் தேடுபவர்கள்,
4) *எல்லை காக்கும் வீரர்களை அவமதிப்பு செய்தல்,
5) எதிரி நாட்டை ஜிந்தாபாத் என்று அழைப்பவர்கள்,
அனைவருக்கும் இந்த வைத்தியம் தேவை.
அப்போது தான் தில்லி மட்டுமல்ல, நாடு முழுவதும் பயங்கரவாதம், நக்சலிசம் ஒழியும்.

ஜெய் ஹிந்த்

சமூகத் தளப் பகிர்வு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari