Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

மிழகத்தின் வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம். என நடிகர் பாஜக நிர்வாகி சரத்குமார் சாத்தூரில் தேர்தல் பரப்புரையாற்றினார்.

சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து, பாஜக பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் சத்தூர் அருகிலுள்ள ஏழாயிரம்பண்ணையில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது பேசிய சரத்குமார், 'தாமரை சின்னத்திற்கு நீங்கள் அளிக்கும் வாக்கு இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கான வாக்கு. ஒரு சிறந்த அரசு என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். குறிப்பாகச் சுகாதாரத்துறையில், 30,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதாரா நிலையம் இருக்கும் போது. 15,000 பேருக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது.

தமிழகத்தின் தற்போதைய ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்த அவர், 'திமுகவில் ஒரு குடும்பம் மட்டுமே அதிகாரத்தில் இருக்க நினைக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வரமாட்டேன் என்றார், ஆனால் வந்தார்; சட்டமன்ற உறுப்பினர் ஆகமாட்டேன் என்றார், ஆனால் ஆனார்; அமைச்சராகவோ அல்லது துணை முதலமைச்சராகவோ பொறுப்பேற்க மாட்டேன் என்றார், ஆனால் தற்போது அந்தப் பதவிகளிலும் அவரே இருக்கிறார். அந்த ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கும் இந்த ஆட்சியை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து பேசிய அவர், 'இந்தியா இன்று உலக அளவில் பொருளாதாரத்தில் 2014 ஆண்டு 10 இடத்தில் இருந்தோம் தற்போது நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் மூன்றாம் இடத்தைப் பிடிக்கப் போகிறோம். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நமது நாட்டின் மனிதவளம் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மேம்படவும், தமிழகம் வளர்ச்சி பெறவும் மத்தியில் ஆளும் அரசுடன் இணக்கமான ஒரு சிறந்த ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது அவசியம்' என்று தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari