Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

(உ.பி. மாநிலம் மீரட்டில் நடந்த புதிய திட்டங்கள் தொடங்கும் மற்றூம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸின் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம் குறித்து விமர்சித்தார்.

அதில் அவர் பேசியவை….)

தேசத்திலேயே, சில அரசியல் கட்சிகள் இருக்கின்றன, இவற்றால் பாரதத்தின் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. இப்போது தான் நீங்களே கவனித்திருக்கலாம், அதாவது பாரதத்திலே, உலகத்திலேயே மிகப்பெரிய, ஏஐ உச்சிமாநாடு நடைபெற்றது.

உலகெங்கிலிருமிருந்தும், 80க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் தில்லிக்கு வந்திருந்தார்கள். உலகத்தினுடைய சுமார், 20 குடியரசுத் தலைவர்கள் பாரதம் வந்திருந்தார்கள். இலட்சக்கணக்கான பேர்கள், இந்தியாவின் அனைத்து பாகங்களிலிருந்தும், தில்லியில் கூடியிருந்தார்கள். உலகின் வளர்ந்துவரும் நாடுகளிலே, இப்படிப்பட்ட மாநாடு, இதுவரை நடந்ததே இல்லை.

நான் இங்கே மீரட்வாசிகளிடம் கேட்க விரும்புகிறேன். இப்போது நடந்து முடிந்த ஏஐ மாநாடு இருக்கிறதே, இது உங்களுக்குப் பெருமையாக இருக்கிறதா இல்லையா? முழுச்சக்தியோடு கூறுங்கள் உங்களுக்கு பெருமையாக இருக்கிறதா இல்லையா?

உங்களைத் தலைநிமிரச் செய்கிறதா இல்லையா? உங்கள் நெஞ்சை விம்மச் செய்ததா இல்லையா? இந்தப் பணி பாரதத்திற்காக நடத்தப்பட்டதா இல்லையா? பாரதத்தின் இளைஞர்களுக்காக செய்யப்பட்டதா இல்லையா? பாரதத்தின் எதிர்காலத்தை மாற்ற அமைக்கப்பட்டதா இல்லையா?

21ஆம் நூற்றாண்டில் தலைமை தாங்கச் செய்யப்பட்டதா இல்லையா? நாடு முழுவதும், புளகாங்கிதம் அடைந்தது. ஆனால் காங்கிரஸும், அதனுடைய சூழலமைப்பும் என்ன செய்தார்கள்? நண்பர்களே காங்கிரஸ் கட்சி, பாரதத்தினுடைய, உலகளாவிய ஒரு ஏற்பாட்டினை, தன்னுடைய கேவலமான, மற்றும் அப்பட்டமான, அரசியலின் களமாக ஆக்கிவிட்டார்கள்.

மாநாடு நடந்த இடத்திலே, அயல்நாட்டு விருந்தினர்கள் முன்பாக, காங்கிரஸின் தலைவர்கள், உடைகளைக் கழற்றிப்போட்டு வந்தார்கள். நான் காங்கிரஸ்காரர்களைக் கேட்கிறேன்.

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்?

காங்கிரஸின் தலைவர்கள், அங்கே செய்தவை எல்லாம், என்ன காட்டுகிறது என்றால், நம் தேசத்தீன் மிகப்பழமையான கட்சி, கருத்தியல் ரீதியாக, எந்த அளவுக்கு காலியாகி விட்டது என்றால், இத்தனை கேவலமாகி விட்டது என்றால், இதை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

நாம் எல்லோரும் எப்படிப்பட்டவர்கள் என்றால், நம் கிராமங்களிலே, யார் வீட்டிலாவது திருமணம் நடக்கிறது என்றால், கிராமம் முழுவதும், அதை வெற்றிகரமாக நடத்திமுடிக்க, முழுமனதோடு ஈடுபடுகிறது.

அப்போது தான், விருந்தாளிகள், கிராமம் பற்றிய நல்ல எண்ணத்தோடு செல்வார்கள். ஆனால் காங்கிரசோ, தன்னுடைய தேசத்திற்கே, அவப்பெயர் ஏற்படுத்துவதிலே முனைந்திருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari