Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திருப்பதிக்குச் செல்லும் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை!

திருப்பதிக்குச் செல்லும் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை!

andal temple mariyathai

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோத்ஸவ விழாவிற்கு புறப்பட்டு சென்றது.

வரும் 8ம் தேதி கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் இருக்கும் பெருமாளுக்கு சாற்றப்படுகிறது~!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மச்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோத்ஸவ விழாவின் கருடசேவை வரும் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

கருட சேவையின் மோகினி அலங்காரத்தில் இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதர்காக ஸ்ரீ ஆண்டாள் சாற்றிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றது.

முன்னதாக 7 ஆம் தேதி அன்று மாலை, தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும்.

இதனை முன்னிட்டு இன்று ஆண்டாள் கோவிலில் காலையில் இருந்தே ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடிபெற்று வந்தன. திருக்கோயில் வளாகத்திலேயே பிரத்யோக மலர்கள் கொண்டு மாலை மற்றும் கிளி தயாரிக்கும் பணி காலை முதல் நடைபெற்று பிற்பகலில் நிறைவுபெற்று ஸ்ரீ ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ALSO READ:திமுக.,வினர் வழங்கிய பிரியாணி சாப்பிட்டு 40 மாணவர்கள் உள்பட பலர் மருத்துவமனையில் அனுமதி!

அதனை தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிகொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவைகள் திருகோயிலின் சார்பில் ஸ்தானிகர் கிச்சப்பன் பெற்றுக்கொண்டு நான்கு மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நான்கு சக்கர வாகனம் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றார்.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரைசார்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Sakthi Paramasivan.k

Media News Reporter, RajapalayamSee Full Bio

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari