Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

வேளச்சேரி - பிருங்கிமலை எம்ஆர்டிஎஸ்., ரயில் சேவை! பயணிகள் மகிழ்ச்சி!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும்ரயில், 80 நிமிடப் பயணம் இனி 15 நிமிடங்களில்!

வேளச்சேரி - பிருங்கிமலை (பரங்கிமலை) பறக்கும் ரயில் : இருபது வருட கனவு நிறைவேறியது பல ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த இந்தத் திட்டத்தை சாத்தியமாக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

சென்னைவாசிகளின் 18 வருட கனவான வேளச்சேரி - பிருங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் இணைப்பு மார்ச் 14ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் MRTS எனும் பறக்கும் ரயில் ஒரு வரப்பிரசாதம். ₹5க்கு அடுத்த ஸ்டேஷன் பஸ் கட்டணம் கூட இல்லாமல் போனபின்பு அதை தருகிறது. மந்தைவெளி - பரங்கிமலை ரிட்டர்ன் டிக்கெட் ₹10. அதனால் மட்டுமல்ல, அதன் மூலம் சேமிக்கும் நேரம் என்பது அதீதமானது. பரங்கிமலை - மந்தைவெளி ஒரு 35 நிமிட நேர பயணம். அதுவும் பரங்கிமலையிலிருந்து வேளச்சேரி மெதுவாக வருவதால் ஒரு 5 நிமிடம் கூடுதல் நேரம். வேளச்சேரி, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஸ்டேஷன் நிற்பதில்லை, அடுத்து பரங்கிமலை ஸ்டேஷன். அது வேளச்சேரி அளவிற்கு பெரியதல்ல என்பதால் அது அங்கிருந்து நீட்டிக்கப் படலாம்.

வேளச்சேரி - பிருங்கிமலை இடையே கடந்த 11ம் தேதி பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனுமதி சான்றிதழ் கிடைக்காததால் தொடங்கி வைக்கப்படவில்லை.. தற்போது தற்காலிக அனுமதிச் சான்றிதழ் கிடைத்துள்ளதால், மார்ச் 14 அன்று பறக்கும் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பிருங்கிமலை வரை எத்தனை ரயில் சேவை, வேளச்சேரி வரை எத்தனை ரயில் சேவைகள், வேளச்சேரி -பிருங்கிமலை இடையே எத்தனை ரயில் சேவைகள் என்பது குறித்து தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வழித்தடத்தில் பல்வேறு சோதனைகள் மற்றும் சவால்களைக் கடந்து பணிகள் முடிக்கப்பட்டது. அண்மையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பயணிகள் ரயிலை இயக்கி பாதுகாப்பு சோதனை செய்தார். அதற்கு முன்பாக சரக்கு ரயில்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டது. தற்போது அனைத்து சோதனைகளும் முடிந்து, தற்காலிக பாதுகாப்புச் சான்றிதழ் கிடைத்தது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மார்ச் 5 அன்று புதிய பாதையில் ஆய்வு மேற்கொண்டார். அதில் திருப்தி அடைந்த அவர், மார்ச் 11 அன்று இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க தற்காலிக அனுமதியை வழங்கினார். இதன்படி தொடக்கத்தில் ரயில்கள் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். மேலும், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள், லிஃப்ட் மற்றும் குடிநீர் வசதி போன்ற சில பணிகளை வரும் மே 15-க்குள் முடிக்க நிபந்தனை விதிக்கப் பட்டிருக்கிறது. எனவே இந்த ரயில் நிலையங்களில் நிறுத்தம் பின்னர் வரும்.

இதுவரை சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் ரயில்கள் வேளச்சேரியுடன் நின்றுவிடும். இனி வேளச்சேரி வழியாக பிருங்கிமலை வரை நீட்டிக்கப்படும். அதேபோல் பிருங்கிமலையிலிருந்து ரயில்கள் கடற்கரைக்குத் திரும்பும். எனவே பயணிகள் மயிலாப்பூர் அல்லது திருவான்மியூரிலிருந்து நேரடியாக பிருங்கிமலை சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில் அல்லது செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்களுக்கு எளிதாக மாற முடியும்.

இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதை அடுத்து வேளச்சேரி, ஆதம்பாக்கம் மக்கள் இனி பஸ் அல்லது ஆட்டோவை நம்பி இருக்காமல் நேரடியாக எழும்பூர் அல்லது செங்கல்பட்டு செல்லும் ரயில்களைப் பிடிக்க பிருங்கிமலைக்கு போக முடியும். அதேபோல் பிருங்கிமலையில் பறக்கும் ரயில், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் என மூன்றுமே ஒரே இடத்தில் சந்திப்பதால் பயண நேரம் பெருமளவு குறையும். வேளச்சேரி-விமான நிலையம் செல்லும் உள்வட்டச் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari