Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

னாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி. ஏற்கனவே இது போல பேசியதற்கு வழக்கு நடக்கிறது.

ஆக இது ஒன்றும் தெரியாமல் பேசிய பேச்சல்ல என்று நிரூபணம் ஆகிறது. அந்த வழக்கை துரிதப்படுத்த நீதிமன்றத்தில் முறையீடு செய்யவேண்டும் பாஜக. (அப்போது முதல்வரின் reactionஐயும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆமோதித்து போல இருந்தது அந்த தலையாட்டல்.)

வேண்டுமென்றே முதல்வரை வம்புக்கு இழுத்து அவரையும் மறைமுக திமுகவாக ஆக்க செய்யப்படும் முயற்சி இது. இதற்கெல்லாம் இசைந்து கொடுப்பது நன்றாக இல்லை.

திமுக ஆதரவு தந்தது விஜயின் கட்சியை காப்பாற்ற அல்ல. மாறாக உள்ளே இழுத்துக்கொள்ள. இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களது மறைமுக வழிகாட்டுதல் இல்லாமல் நடக்காது. இதை விஜய் உணர்ந்தால் நல்லது.

முதல்வர் மீது இருக்கும் சந்தேக நிழலை ஊர்ஜிதம் செய்வது போல இருக்கிறது அந்த தலையாட்டல். முதல்வரின் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனிக்கப்படுகிறது. உங்களுக்கு வாக்களித்தது வெறும் கிருஸ்தவர்கள் மட்டுமல்ல. மிகப்பெரும்பான்மையில் ஹிந்துக்களே. இளைஞர்களும் பெரியவர்களும் இளைஞிகளும் மிகப்பெருமளவில் நம்பிக்கை வைத்துள்ளார்கள் முதல்வர் மீது.

திமுக விரிக்கும் வலையில் சிக்கி வீணாக்கிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். சாராய கடைகளை மூடுவது பெரும் பாராட்டுக்குரிய செயல். இதுதான் தேவை நாட்டுக்கு. இந்த காலாவதியான சனாதன எதிர்ப்பை கையில் எடுத்ததன் விளைவைத்தான் திமுக இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

ALSO READ:விஜயின் வெற்றி - அதிர்ஷ்டமா? ஆளுமையா?

உறவாடிக்கெடுக்க முயற்சி செய்கிறது திமுக, செய்தே தீரும், நம்பிக்கையை பெற்றே தீரும், விஜயை அழித்தே தீரும். எப்படி அழிந்தோம் என்ற தடம் கூட தெரியாமல் அழிக்கும். யாராவது முதல்வருக்கு இதை சொல்லுங்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari