Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க நகைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகரின் மற்றொரு பகுதியில் ₹1.25 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்களும் இதேபோல் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட போது அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளன

விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூலக்கரை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையின் போது, நாகர்கோவில் நோக்கி சென்ற வாகனத்தில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.14.2 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நகைக்கு உரிய ஆவணங்கள் காட்டப்படாததால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது

மதுரையில் இருந்து மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த நகைகளுக்குத் தேவையான உரிய ஆவணங்கள் இல்லாததால், அவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், விருதுநகரின் மற்றொரு பகுதியில் ₹1.25 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்களும் இதேபோல் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari