Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறை மீறிய 12 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக பட்டாசு தொழில் விளங்கி வருகிறது சுமார் 1200 பட்டாசு ஆலைகளில் நான்கு லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தொடர் வெடி விபத்துகளைத் தடுக்க பட்டாசு ஆலைகளில் விதி மீறல்கள் உள்ளதா என ஆய்வு செய்ய தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் சார்பில் 6 குழுக்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 30 நாட்களில் மட்டும் 206 பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்துள்ள இக்குழு சிறிய அளவிலான விதி மீறல்கள் கண்டறியப்பட்ட 82 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியும், விதிமீறல்கள் கண்டறிப்பட்ட 12 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ALSO READ:கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari