Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பல லட்சம் பேர் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர்.இவ் விழா இன்று விடிய விடிய நடைபெறும். இந்த ஆண்டு துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்த திருச்சூர் பூரம் திருவிழா பட்டாசு வெடிக்க தேக்கி வைத்திருந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசு வெடித்து 15பேர் உயிரிழந்த சம்பவத்தால் பட்டாசு வெடிக்கும் வாணவேடிக்கை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

கடும் வெப்பம் காரணமாக முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும் பல லட்சம் பேர் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

கேரள கலாச்சாரத்தின் அடையாளமாகப் போற்றப்படும் திருச்சூர் பூரம் விழா, பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.

'பூரங்களின் தாய்' என்று அழைக்கப்படும் திருச்சூர் வடக்குநாதன் கோயில் பூரம் விழா, வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. 36 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த விழாவில், அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு, இலஞ்சித்தார மேளம் மற்றும் பஞ்சவாத்யம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பக்தர்களைப் பரவசப்படுத்தின.

ALSO READ:சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

கடந்த 21 ஆம் தேதி முண்டத்திக்கோடு பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்த சோக சம்பவத்தால், பாதுகாப்பு கருதி பிரமாண்ட வாணவேடிக்கை ரத்து செய்யப்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari