Dailyhunt
பெரும் ஷோக் கொடுத்த BSNL யின் இந்த பாப்புலர் திட்டத்தில் மீண்டும் வேலிடிட்டி குறைப்பு

பெரும் ஷோக் கொடுத்த BSNL யின் இந்த பாப்புலர் திட்டத்தில் மீண்டும் வேலிடிட்டி குறைப்பு

Digit 1 week ago

ரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு அதிரடி ஷோக் கொடுத்துள்ளது மிகவும் பாப்புலர் வவுச்சரான ரூ,107 மற்றும் ரூ,197 இந்த திட்டத்தை இப்பொழுது மீண்டும் மாற்றியுள்ளது இந்த திட்டத்தை ஏற்கனவே நவம்பர் 2025 மாற்றியது அதனை தொடர்ந்து இப்பொழுது மீண்டும் மாற்றியுள்ளது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ, 107 திட்டத்தின் நன்மை.

BSNL-இன் ரூ,107 ப்ரீபெய்ட் திட்டம் முன்பு 22 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் வந்தது, மேலும் கஸ்டமர்களுக்கு 200 நிமிட வொயிஸ் காலிங் மற்றும் 3GB டேட்டாவை வழங்கியது. இருப்பினும், 3GB டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு, வேகம் 40 Kbps ஆகக் குறைந்துவிடும்.

தற்போது நிறுவனம் இந்தத் திட்டத்தின் செல்லுபடியாவெளிடிஇடி கும் காலத்தை மேலும் குறைத்துள்ளது. இது 22 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தத் திட்டம் முன்பு 35 நாட்கள் வேலிடிட்டி காலத்தை வழங்கியது, ஆனால் அது படிப்படியாக 30, பின்னர் 28, பிறகு 22 எனக் குறைக்கப்பட்டு, இப்போது வெறும் 20 நாட்களாக உள்ளது.

:அரசின் அதிரடி BSNL யின் ரூ,1 வரும் திட்டம் மீண்டும் வந்தாச்சு அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா

BSNL ரூ,197 திட்டம்

BSNL யின் ரூ.197 திட்டத்தின் வேலிடிட்டி காலம் மீண்டும் குறைக்கப்பட்டது.
பிஎஸ்என்எல்-இன் ரூ,197 ப்ரீபெய்ட் திட்டமும் திருத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இப்போது 42 நாட்களுக்குப் பதிலாக 35 நாட்கள் வேலிடிட்டியுடன் காலத்துடன் வருகிறது. பயனர்கள் 300 நிமிட வொயிஸ் காலிங், அன்லிமிடெட் டேட்டா (5GB-க்கு மேல் ஸ்பீட் 40 Kbps ஆகக் குறையும்), மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறலாம் .

சுவாரஸ்யமாக, இந்தத் திட்டம் முன்பு 42 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் இதில் 4GB டேட்டாவை வழங்கியது, அது இப்போது 5GB ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காலப்போக்கில் இதன் வேலிடிட்டி காலம் குறைந்துள்ளது. ஆரம்பத்தில், இந்தத் திட்டம் 54 நாட்கள், பின்னர் 48 நாட்கள், பிறகு 42 நாட்கள் எனச் வேலிடிட்டி , இப்போது வெறும் 35 நாட்களாக மட்டுமே உள்ளது.

திட்டங்களும் அவற்றின் பலன்களும் உங்கள் வட்டத்தைப் பொறுத்து மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, உங்கள் வட்டத்திற்கான திட்ட விவரங்களை BSNL செல்ஃப்கேர் செயலியிலோ அல்லது அதிகாரப்பூர்வ BSNL வெப்சைட்டில் சரிபார்க்கவும்.

Read more news like this on www.digit.in

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Digit Tamil