Dailyhunt
ChatGPT Palm Trend: புதுசா வைரலாகும் இந்த கைரேக ட்ரெண்டிங் பயன்படுத்து முன் யோசிங்க ஏன்

ChatGPT Palm Trend: புதுசா வைரலாகும் இந்த கைரேக ட்ரெண்டிங் பயன்படுத்து முன் யோசிங்க ஏன்

Digit 2 weeks ago

ChatGPT சம்பந்தப்பட்ட ஒரு புதிய வைரல் டிரெண்ட் இந்த நாட்களில் சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

பலர் தங்கள் உள்ளங்கைகள் மற்றும் முகங்களின் போட்டோக்களை அப்லோட் செய்து , தங்கள் உள்ளங்கைக் கோடுகள் மற்றும் முக அம்சங்களின் அடிப்படையில் தங்கள் எதிர்காலத்தைப் பகுப்பாய்வு செய்யுமாறு ChatGPT-யிடம் கேட்டு வருகின்றனர். இந்த டிரெண்ட் வேடிக்கையாக இருந்தாலும், இதில் உள்ள டேட்டாக்கள் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, ஆர்டிபிச்யல் இன்டலிஜன்ஸ் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் அபாயமும் உள்ளது.

இதற்கிடையில், இந்த டிரெண்ட் பற்றிய ஒரு மீம் வைரலாகி வருகிறது. அதில், உங்கள் உள்ளங்கை அல்லது முகத்தின் புகைப்படத்தை நீங்கள் அப்லோட் செய்வதனுடன் , உங்கள் தரவுகள் நேரடியாக CIA-வுக்கு (Central Intelligence Agency) சென்றுவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் நடக்கும் அபயம் ஏதேனும் இருக்கிறதா என முழுசா பார்க்கலாம் வாங்க.

வைரல் ட்ரெண்டின் முழு தகவல் என்ன ?

சோசியல் மீடியாக்களில் ஒரு புதிய ட்ரென்ட் வேகம் பிடித்துள்ளது.chatgpt பயனர்கள் தங்களைப் பற்றிய விவரங்களைக் கைரேகை மூலம் கேட்பதற்காக, தங்கள் முகங்கள் மற்றும் உள்ளங்கைகளின் படங்களை ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் டூல் மூலம் பதிவேற்றுகின்றனர். சாம் ஆல்ட்மேன் தலைமையிலான நிறுவனம் சமீபத்தில் தனது போட்டோ (image) உருவாக்க மாடலை அப்க்ரெட் , ChatGPT Images 2.0-ஐ அறிமுகப்படுத்திய பிறகு இந்தப் ட்ரென்ட் ஆக்கி முக்கியத்துவம் பெற்றது. ChatGPT மிகவும் புகழ்ச்சியான மற்றும் விரிவான பதில்களை வழங்கியதாகப் பல சோசியல் மீடியா பயனர்கள் பகிர்ந்துகொண்டனர், இது X மற்றும் ரெட்டிட் முழுவதும் இந்தப் ட்ரென்ட் பரவ உதவியது.

அதன் பிறகு இப்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் பெசும்போருளாக மாறியுள்ளது இந்தப் ட்ரென்ட் வளர வளர, அது தொடர்பான மீம்களும் வெளிவந்தன. பிரபலமான மீம்களில் ஒன்று, பயனர்கள் தங்கள் பயோமெட்ரிக் டேட்டாக்களை CIA போன்ற முகமைகளுக்கு வழங்குகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியது. இந்தக் கூற்று மிகைப்படுத்தப்பட்டது என்பது புரிந்துகொள்ளப்பட்டாலும், இது டேட்டா பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது.

பிங்கர்ப்ரின்ட் பார்த்தல் மற்றும் பேஸ் ரீடிங் போன்ற வேடிக்கையான போக்குகளுக்கு மத்தியில், பலர் ப்ரைவசி குறித்த கவலைகளை எழுப்பி வருகின்றனர். நாம் அப்லோட் கை அல்லது முகப் புகைப்படங்கள் சாதாரணமானவை அல்ல என்று சில பயனர்கள் கூறுகின்றனர். அவற்றில் நமது கைரேகைகள், கையின் வடிவம் மற்றும் முக அம்சங்கள் போன்ற அளவீட்டு விவரங்கள் அடங்கியுள்ளன. மிக முக்கியமாக, பாஸ்வர்ட் போலல்லாமல், இவற்றை மாற்ற முடியாது. இந்தத் தகவல் எப்போதாவது தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றால், அது தவறாகப் பயன்படுத்தப்படலாம்.

ChaGpt யில் இந்த அம்சத்தை பயன்படும்போது டேட்டாவை பாதுகாப்பாக வைப்பது எப்படி?

செட்டிகில் மாடல் ட்ரைனிங் off செய்வதன் மூலமும், தற்காலிக சேட் அமர்வுகளைப் பயன்படுத்துவதன் மூலமும், சேட் ஹிஸ்டரியை தவறாமல் டெலிட் செய்வதன் மூலமும் பயனர்கள் தங்கள் டேட்டா ப்ரைவசியை மேம்படுத்திக்கொள்ளலாம். ப்ரைவசி ச்டிங்க்களை பற்றி அறிந்திருப்பதும், முக்கியமான போட்டோ அல்லது தகவல்களைப் பகிர்வதைத் தவிர்ப்பதும் அவசியம். இந்த செட்டிங்களை சரிபதன் மூலம், பயனர்களின் டேட்டாக்கள் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் ட்ரைனிங்க்கு பயன்படுத்தப்படுவதையோ அல்லது அனுமதியின்றி சேமிக்கப்படுவதையோ தவிர்க்கலாம்.

Read more news like this on www.digit.in

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Digit Tamil