Dailyhunt
சத்தமில்லாமல் அதிரடி ஷோக் கொடுத்த Jio, திடிரென இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை குறைப்பு

சத்தமில்லாமல் அதிரடி ஷோக் கொடுத்த Jio, திடிரென இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை குறைப்பு

Digit 1 week ago

ந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு சத்தமில்லாமல் அதன் ரூ,195 யில் வரும் கிரிகெட் டேட்டா பேக் திட்டத்தை மாற்றியுள்ளது அதாவது இந்த திட்டத்தில் வரும் வேலிடிட்டியை நன்மையை குறைத்துள்ளது, இந்த திட்டமானது முன்பு அதிக வெளிடிடியாக 90 நாட்களாக இருந்தது ஆனால் இப்பொழுது ஒரே அடியாக மிக மிக குறைவாக குறைத்துள்ளது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,195 கிரிகெட் டேட்டா பேக்

அப்டேட் செய்யப்பட்ட பேக்கின் கீழ், சப்ஸ்க்ரிப்ஷன்களுக்கு மொத்தம் 15 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது , இவை அனைத்தும் அதிவேகத்தில் கிடைக்கும். ஒதுக்கப்பட்ட டேட்டா தீர்ந்தவுடன், கஸ்டமர்களுக்கு 64 Kbps என்ற குறைக்கப்பட்ட வேகத்தில் இண்டர்நெட்டை தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த பேக் டேட்டாவை மட்டுமே கொண்டது, இதில் வொயிஸ் அல்லது SMS நன்மைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. டேட்டாவுடன் கூடுதலாக, கிரிக்கெட் மற்றும் பிற உள்ளடக்கங்களை ஸ்ட்ரீம் செய்ய விரும்பும் கச்டமர்களுக்காக , இந்தத் திட்டம் 90 நாட்களுக்கான இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் தொடர்ந்து வழங்குகிறது.

டேட்டா ஒதுக்கீடு மாற்றப்படாமல் இருப்பதும், சந்தா பலன் சேர்க்கப்பட்டிருப்பதும் ஒருபுறம் இருக்க, செல்லுபடியாகும் காலம் 90 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் கடுமையாகக் குறைக்கப்பட்டிருப்பது, நுகர்வோருக்கான மாதாந்திரச் செலவை திறம்பட அதிகரிப்பதால், இந்தத் திருத்தம் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாக அமைகிறது.

அதாவது இந்த திட்டத்தை இப்பொழுது திருத்தி இதன் வேலிடிட்டி அதிகபட்சமாக 30 நாட்களாக இருக்கிறது மேலும் இந்த திட்டம் போர்ட்போலியோ திட்டத்தின் கீழ் வருகிறது.
ஜியோவின் மற்ற கிரிகெட் டேட்டா பேக்

Jio ரூ,149 கிரிகெட் டேட்டா பேக்

ஜியோ, ரூ. 149 விலையில் அதிக மதிப்புள்ள டேட்டா பேக்கையும் வழங்குகிறது. இதில் 30 நாட்கள் செல்லுபடியுடன் கூடிய 10GB அதிவேக டேட்டாவும், 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் அடங்கும். அதிவேக டேட்டா தீர்ந்த பிறகு, பயனர்கள் தொடர்ந்து 64 Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டாவைப் பயன்படுத்தலாம்.

: நங்கூரம் போல இறக்கிய Airtel யில் அசத்தல் திட்டம் வெறும் ரூ,400க்குள்அன்லிமிடெட் 5G டேட்டா காலிங், மற்றும் பல நன்மை

Jio Rs 100 கிரிகெட் டேட்டா பேக்.

தனது கிரிக்கெட் டேட்டா பேக் சலுகையின் ஒரு பகுதியாக, ஜியோ நிறுவனம் ஏற்கனவே உள்ள ரூ.100 டேட்டா பேக்கில் டேட்டா பலனை அதிகரித்துள்ளது. ஜியோவின் ரூ.100 டேட்டா பேக் இப்போது 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது இந்த திட்டத்தில் 6ஜிபி இருந்தது (முன்பு 5ஜிபி) அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இந்த அதிவேக டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு, கஸ்டமர்களுக்கு 64 Kbps என்ற குறைக்கப்பட்ட வேகத்தில் இண்டர்நெட்டை தொடர்ந்து பயன்படுத்தலாம். கூடுதலாக, இந்த பேக்குடன் 30 நாட்களுக்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது.

Jio ரூ 79 கிரிக்கெட் டேட்டா பேக்

ஜியோ, ரூ.79 விலையில் 'கிரிக்கெட் டேட்டா பேக்' ஒன்றை வழங்குகிறது. இதில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் 3ஜிபி அதிவேக டேட்டாவும், அதனுடன் 30 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் அடங்கும். ஒதுக்கப்பட்ட டேட்டா தீர்ந்தவுடன், பயனர்கள் 64 Kbps என்ற குறைக்கப்பட்ட வேகத்தில் இண்டர்நெட்டை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

Read more news like this on www.digit.in

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Digit Tamil