தின செய்திகள்
தின செய்திகள்

144 தடை உத்தரவை மீறிய கிராமங்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சீல் வைப்பு !!

144 தடை உத்தரவை மீறிய கிராமங்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சீல் வைப்பு !!
  • 1086d
  • 00

திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரகநல்லூர் ஊராட்சி இஸ்லாம் நகர் பகுதி மற்றும் முஸ்லிம் நகர் பகுதியில் பெரும்பாலானோர் காய்கறி நறுக்கும் கத்தியை கூர்மை தீட்டும் தொழில் செய்கின்றனர். பெரும்பாலும் கேரளா மாநிலத்திற்கு சென்று அந்தப் பகுதியில் தொழில் செய்பவர்கள். இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்தது வருவதால் , அங்கு சென்று திரும்பிய இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர் மக்கள் அனைவரும் தனிமைப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தங்காமல் நகர்புறம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு அடிக்கடி சென்று வந்தனர். எனவே அரசு ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்காததால் , அந்த கிராமங்களை சுற்றி காவலர்களை அதிகாரிகள் நியமித்து செக்போஸ்ட் அமைத்து சீல் வைத்தனர்.

No Internet connection

Link Copied