Monday, 21 Oct, 11.47 pm தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
பிரான்சில் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்ட நாள்

பிரான்சின் முதல் முறையாக பெண்கள் வாக்குரிமை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

1805 – டிரபல்கார் என்ற இடத்தில் பிரிட்டன் படைகள் பிரெஞ்சு, மற்றும் ஸ்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரிட்டன் கடற்படையை 20-ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.

1805 – ஊல்ம் என்ற இடத்தில் ஆஸ்திரியா, நெப்போலியனின் பெரும் ராணுவத்திடம் சரணடைந்தது. நெப்போலியன் 30 ஆயிரம் பேரைச் சிறைப்பிடித்தான்.

1824 – ஜோசப் ஆஸ்ப்டின் போர்ட்லண்ட் சிமெண்டுக்கான காப்புரிமம் பெற்றார்.

1837 – அமெரிக்கப் பழங்குடித் தலைவன் ஒசியோலா கைது செய்யப்பட்டான்.

1854 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் மற்றும் 38 தாதிகள் கிரிமியன் போர் முனைக்கு அனுப்பப்பட்டனர்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வேர்ஜீனியாவில் தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் எட்வேர்ட் பேக்கர் கொல்லப்பட்டார்.

1876 – யாழ்ப்பாணத்தில் காலரா நோய் வேகமாகப் பரவியது.

1879 – தாமஸ் எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top