Saturday, 14 Dec, 10.43 pm தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
பொதுமக்களே தயவு செய்து வன்முறையில் ஈடுபடாதீர்கள்- மம்தா பானர்ஜி வேண்டுகோள்

கொல்கத்தா,

மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்தது. கடும் எதிர்ப்புகளை மீறி அந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. குடியுரிமை சட்டம் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடைபெறும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, குடியுரிமை திருத்த சட்டம் 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தப்படாது என்பது உறுதி. அவற்றை நாங்கள் அனுமதிக்க போவதில்லை. அதனால் மக்களே தயவு செய்து நீங்கள் சாலை மறியலில் ஈடுபடாதீர்கள். சட்டத்தினை கைகளில் எடுத்து கொள்ளாதீர்கள்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top