Sunday, 24 Jan, 9.23 am தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : 283 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி

இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலேவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்க்சில் 381 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்க்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 107 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட் இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 283 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் இங்கிலாந்து அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தில் விளையாடும்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top