Sunday, 24 Jan, 11.40 am தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
இப்போது கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து வெளியான தகவல்

சமீப காலமாக இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. இதில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது தெம்பை அளிப்பதாக உள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடையும் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இதனிடையே , கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,54,533 அதிகரித்துள்ளது . சென்ற 24 மணி நேரத்தில் 14,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 155 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,339 ஆக அதிகரித்திருக்கிறது .

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top