Wednesday, 06 Nov, 8.00 am தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
கிரிக்கெட் வர்ணனையாளர் குழுவில் தோனி ?

கொல்கத்தா,

இந்தயாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 பொட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இதில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

இந்தியாவில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்த டெஸ்ட் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன்கள் அனைவரையும் போட்டியின் வர்ணனையாளர் அறைக்கு அழைத்து வர இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு அனுமதி கேட்டு இ-மெயில் அனுப்பி இருக்கிறது.

இதில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்கும் டோனியையும் கவுரவ வர்ணனையாளராக கலந்து கொள்ளுமாறு அந்த நிறுவனம் அழைப்பு விடுத்து இருக்கிறது. இதனால் டோனி வர்ணனையாளர் குழுவில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top