Saturday, 23 Jan, 11.45 pm தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
கொரோனா வைரஸ் : ஹாங்காங்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹாங்காங்கில், கௌலூன் வட்டாரத்தின் யாவ் சிம் மொங் பகுதியில் இதுவரை இல்லாத வகையில், முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், குடியிருப்பாளர்கள் சுமார் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓராண்டு நோய்ப்பரவல் சூழலில் அதிகாரிகள் எடுத்துள்ள ஆகக் கடுமையான நடவடிக்கை அது. கடந்த வாரம் நாள்தோறும் கோவிட்-19 கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர் கௌலூன் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோர் மூத்த குடிமக்கள். குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் கிருமிக்கான பரிசோதனை நடத்த அரசாங்கம் திட்டமிடுகிறது. அந்தச் சோதனைகள் முழுமையடைந்தது தெரியவந்த பிறகே, அங்கு முடக்கம் தளர்த்தப்படும். முடக்க விதிகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய 1,700-க்கும் அதிகமான அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top