Monday, 23 Sep, 7.17 am தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
குஜராத்தில் மேலும் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

புதுடெல்லி:

மராட்டியம், அரியானா மாநில சட்டசபைகளுக்கு அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதனுடன் சேர்த்து குஜராத் மாநிலத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதி உள்பட 18 மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளுக்கும் அன்றைய தினம் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள ரத்தன்பூர் மற்றும் பயாத் ஆகிய மேலும் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top