Sunday, 15 Dec, 6.07 am தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
மனைவிக்கு விலையுயர்ந்த பரிசளித்த நடிகர் அக்‌ஷய்குமார்

நடிகர் அக்‌ஷய் குமார் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை கரீனா கபூர் உடன் இணைந்து பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கரீனா கபூருக்கு பரிசாக வெங்காய தோடு வழங்கப்பட்டது. அந்த வெங்காய தோடை கரீனா கபூர் பெரிதாக விரும்ப வில்லை.

இதனால் அக்‌ஷய் தனது மனைவிக்காக அதை கேட்டு வாங்கி வந்துள்ளார். இதுகுறித்து அக்‌ஷய் குமாரின் மனைவியும் நடிகையுமான டிவிங்கிள் கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், 'எனது கணவர் எனக்காக இந்தப் பரிசை வாங்கி வந்துள்ளார். முதலில் அந்த நிகழ்ச்சியில் கரீனாவுக்கு வழங்கப்பட்ட இந்தக் காதணியை அவர் பெரிதும் விரும்பவில்லை போல. எனக்கு பிடிக்கும் என நினைத்து இதை அக்‌ஷய் வாங்கி வந்துள்ளார். சில நேரங்களில் சின்ன சின்ன வி‌ஷயங்கள் கூட உங்கள் மனதை கவரலாம்" என குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top