Thursday, 03 Oct, 11.18 am தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
முதல் இன்னிங்க்சில் தென் ஆப்பிரிக்கா திணறல்

முதல் டெஸ்ட் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. முதல் நாளன்று தொடக்க வீரா்கள் மயங்க் அகா்வால்-ரோஹித் சா்மா ஆகியோா் அபாரமாக ஆடினார்கள். முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் சேர்த்தனர். இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரோஹித் 176 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

சிறப்பாக விளையாடிய அகர்வால் இரட்டை சதம் அடித்தார். முதல் இன்னிங்க்சில் இந்திய அணி 502/7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்க்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்கமுடியாமல் அடுத்து அடுத்து அவுட் ஆனார்கள். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top