Tuesday, 26 Jan, 3.18 pm தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
நாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை திரும்ப பெறுங்கள் - ராகுல் காந்தி

டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர். அப்போது திடீரென டிராக்டருடன் ஒரு குழுவினர் டெல்லிக்குள் நுழைந்தனர். போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அதிகமானோர் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல. யாராவது காயமடைந்தால் அது நாட்டுக்கும் சேதம். நாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை திரும்ப பெறுங்கள் என்று கூறியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top