Saturday, 14 Dec, 10.14 pm தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
சபரிமலை கோவில் நடை திறந்த 27 நாளில் ரூ.100 கோடி வருமானம்

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை பிரசித்திபெற்றதாகும். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. நடை திறந்த முதல்நாளில் இருந்தே சபரிமலையில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தபடி இருப்பதால் பக்தர்களை வரிசையில் போலீசார் சன்னிதானம் நோக்கி அனுப்பி வருகிறார்கள். இதனால் சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு கோவிலுக்கு கிடைக்கும் வருமானமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடை திறந்து 27 நாட்கள் (டிசம்பர் 14) ஆன நிலையில் உண்டியல் காணிக்கை, பிராசாத விற்பனை போன்றவற்றின் மூலம் கோவிலுக்கு வருமானமாக 100 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top