Tuesday, 12 Feb, 11.44 pm தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
சிவகாசியில் 2-வது நாளாக பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்

விருதுநகர்:

பட்டாசு உற்பத்தியின் மையமாக விளங்கும் சிவகாசியில் கடந்த நவம்பர் மாதம் முதல் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு, பட்டாசு உற்பத்திக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும், பட்டாசு தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 3 மாதங்களாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று ஆலைகளை உடனே திறக்க வலியுறுத்தி நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்றும் 2-வது நாளாக சிவகாசியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது . இதில் பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top