Saturday, 14 Dec, 10.19 pm தின செய்திகள்

தேசிய செய்திகள்
தெலுங்கானாவில் இன்று லோக் அதாலத் மூலம் 25,985 வழக்குகளுக்கு தீர்வு

ஐதராபாத்:

‘லோக் அதாலத்' எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானம் அல்லது சமரசப் பேச்சுவார்த்தைகள் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம். இந்த நடைமுறை உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89-ன்கீழ் வருகின்றது.

அந்த வகையில், தெலுங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று நடைபெற்ற 'லோக் அதாலத்' எனப்படும் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் 25,985 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, இழப்பீடாக ரூ.54.60 கோடி வழங்கப்பட்டது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top