Friday, 04 Oct, 9.18 am தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
விஜய் ஹசாரே டிராபி : அசாமை வீழ்த்தி சண்டிகார் அபார வெற்றி

இந்தியாவின் மிக்கப்பெரிய உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டேராடூனில் நடைபெற்ற ஆட்டத்தில் அசாம் – சண்டிகர் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மைதானம் ஈரப்பதம் காரணமாக இந்த போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் களமிறங்கிய சண்டிகர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ப்ரீட் கமல் 34 ரன்களும், பிபுல் சர்மா 25 எடுத்தனர். மனன் வோரா 19 ரன்களும், ஜாஸ்கரன்வர் 28 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அசாம் அணி 19.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.அதிகபட்சமாக புர்கய்த்தா 32 ரன்களும், அபு நிச்சம் 31 ரன்களும் எடுத்தனர். சண்டிகர் அணி தரப்பில் பரிந்தர் சரண் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top