Saturday, 14 Dec, 10.10 pm தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை- வெளியான தகவல்

விஷால் நடிப்பில் சில வாரங்கள் முன்பு வெளியான ஆக்ஷன் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. படமும் பெரிய அளவில் வசூல் ஈட்டவில்லை என்று கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க விஷால் அடுத்து இருமுகன் புகழ் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். தற்போது துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் இருக்கும் அவர் அது முடிந்ததும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்.

ஆனந்த் ஷங்கர் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ரீத்து வர்மா ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வந்துள்ளது. அவர் ஏற்கனவே விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top