Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொள்முதல்... டெண்டர் கோரியது பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்!

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொள்முதல்... டெண்டர் கோரியது பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்!

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.277 கோடி மதிப்பீட்டில் 5.32 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் டெண்டர் கோரியுள்ளது.

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, இந்த முறை மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஹெல்மெட் மற்றும் குடிநீர் பாட்டில் வைக்கும் நவீன வசதிகளுடன் கூடிய சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நவீன ஏற்பாடு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

விரைவில் டெண்டர் நடைமுறைகள் முடிக்கப்பட்டு, மாணவர்களுக்குப் பாதுகாப்பான நவீன சைக்கிள்கள் வழங்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்தச் சிறப்பான நடவடிக்கையானது மாணவர்களின் கல்விச் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் அமைந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai