Dailyhunt
2 வது நாளாக மீண்டும் ஆட்டம் காட்டும் தங்கம் விலை .... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

2 வது நாளாக மீண்டும் ஆட்டம் காட்டும் தங்கம் விலை .... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

மாதம் 25-ம் தேதி முதல் தங்கத்தின் விலையில் பெரும் மாற்றங்கள் நிலவி வருகின்றன. இடையில் சற்று விலை குறைந்திருந்த நிலையில், மீண்டும் விலை ஏறுமுகத்தில் செல்வது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் 1,11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை 100 ரூபாய் அதிகரித்து 13,950 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறையுமா அல்லது மேலும் உச்சத்தைத் தொடுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai