Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
5-வது நாளாக சுருளி அருவியில் குளிக்கத் தடை... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

5-வது நாளாக சுருளி அருவியில் குளிக்கத் தடை... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை 5-வது நாளாக இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையால் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கம்பம் மேற்கு வனச்சரக வனத்துறையினர் அருவியில் குளிக்கவும், அங்கு செல்லவும் தடை விதித்துள்ளனர்.

நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நீர்வரத்து குறைந்து பாதுகாப்பான சூழல் ஏற்பட்ட பின்னரே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai