Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் விஜய்... ஆளுநரைச் சந்திக்க இன்று செல்கிறார்!

ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் விஜய்... ஆளுநரைச் சந்திக்க இன்று செல்கிறார்!

மிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (மே 6) தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.

நேற்று நடைபெற்ற கட்சியின் சட்டமன்றக் குழு கூட்டத்தில் விஜய் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பு நிகழ உள்ளது. தவெக-வின் 108 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை அவர் ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ளார்.

மொத்தம் 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டசபையில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெக-விற்கு 10 இடங்கள் குறைவாக உள்ளன. இதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட பிற மதச்சார்பற்ற கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரியுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைமை இதற்கான சாதகமான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மெஜாரிட்டியை நிரூபிப்பதற்கான 14 நாட்கள் கால அவகாசத்தை ஆளுநரிடம் விஜய் கோருவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியலில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு புதிய சக்தியாகத் தவெக அரியணை ஏறத் தயாராகி வருகிறது. ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து, நாளை (மே 7) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்பார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காணத் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் சென்னை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai