Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆகஸ்ட் 4ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்!

ஆகஸ்ட் 4ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்!

2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (MCC) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான இந்தத் தகவலை மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் கவனித்து வருகின்றனர்.

இதன்படி, 2026-27 ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 4-ந்தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 4-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. மேலும், மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 13-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in மூலமாக விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த கலந்தாய்வு அட்டவணை வெளியாகி இருப்பது மருத்துவப் படிப்பு மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் தங்களுக்குரிய தேதிகளில் உரிய ஆவணங்களுடன் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai