Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அடுத்த அதிர்ச்சி... சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.10 உயர்வு!

அடுத்த அதிர்ச்சி... சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.10 உயர்வு!

நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாகக் கட்டுமானப் பணிகள் மந்தமடைந்து சிமெண்ட் விற்பனை குறையும் என்ற அச்சத்தில், உற்பத்தியாளர்கள் சிமெண்ட் விலையை மூட்டைக்கு ரூ.10 உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், வீடு, ப்ளாட் விலைகள் கோடிகளுக்கு உயர்ந்துள்ள நிலையில், தற்போது மேலும் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.

பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் சிமெண்ட் விற்பனை சரிவைச் சந்திக்கும் என்ற காரணத்தால், உற்பத்தியாளர்கள் அதன் விலையை மூட்டைக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ரூ.330-ஆக இருந்த சிமெண்ட் விலை, வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ரூ.40 அதிகரித்து ரூ.370-ஆக உயர்ந்தது.

அதனைத் தொடர்ந்து போர் பதற்றங்கள் தணிந்தபோது விலை குறைந்து ரூ.342-ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பருவமழை தாக்கத்தால் மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai