Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம் - 1,540 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலி!

ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம் - 1,540 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலி!

ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான மோதல்களின் எதிரொலியாக, ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

சவுதி அரேபியா ஆதரவு பெற்ற ஏமன் அரசுப் படைகளும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தீவிர மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சவுதி அரேபியாவுடன் இணைந்து ஏமன் அரசுப் படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு அதிரடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தீவிரத் தாக்குதல்களில் சுமார் 1,540 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டோ அல்லது படுகாயமடைந்தோ உள்ளதாக ஏமன் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai