அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட கல்வி நாட்காட்டியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இது முக்கிய அறிவிப்பாகும்.
AICTE அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 17, 2026 முதல் தொடங்கியுள்ளன. கலந்தாய்வு முடிந்து காலியாக உள்ள இடங்களில் மாணவர்களைச் சேர்க்க செப்டம்பர் 14, 2026 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டயப் படிப்பு முடித்து நேரடியாக இரண்டாமாண்டில் சேர விரும்பும் மாணவர்களுக்கான சேர்க்கைக்கும் செப்டம்பர் 14, 2026 இறுதி நாளாகும்.

இதுவரை இடம் கிடைக்காத மாணவர்கள் அல்லது காலியிடங்கள் மூலம் சேர விரும்புவோர், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகக் காலியிடங்களின் நிலவரத்தை அறிந்து உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

இப்புதிய நாட்காட்டி வழக்கமான தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கு மட்டுமின்றி, AICTE அங்கீகாரம் பெற்ற மேலாண்மை நிறுவனங்களின் PGDM மற்றும் PGCM படிப்புகளுக்கும் பொருந்தும்.

