தமிழக அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் வேட்டிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இருமுடிப் பைகள், சபரிமலையில் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரையின்போது பயன்படுத்தும் இருமுடிப் பைக்கு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலவச வேட்டி பயன்படுத்தப்படுகிறதா?
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் ஆதரவாகச் செயல்படுத்தப்படுகிறது
இந்நிலையில், அரசின் இலவச வேட்டியில் இருமுடிப் பைகள் தயாரிக்கப்பட்டு சபரிமலையில் விற்பனை செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பைகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன, அவற்றில் பயன்படுத்தப்படும் வேட்டிகள் அரசின் இலவசத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டவைதானா என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் தேவை.

