Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அரியர் தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அரியர் தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைநிலை மற்றும் இணையவழி கல்வி மையத்தில் 2017-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு படித்து படிப்பை முடிக்காத மாணவர்களுக்காகச் சிறப்பு அரியர் தேர்வு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

படிப்புக் காலம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் பாடங்களில் அரியர் வைத்துள்ள 2017 மற்றும் அதற்கு முந்தைய சேர்க்கைச் சேர்ந்த மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம்.

மாணவர்கள் தாங்கள் பயின்ற பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே மீண்டும் தேர்வு எழுதிப் பட்டத்தைப் பெறச் சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களின் வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன், அரியர் பாடத்தாள் ஒன்றுக்குச் சிறப்பு கட்டணமாக ரூ.2,000 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ள தகுதியான மாணவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்து இச்சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai