Dailyhunt
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்... நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை!

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்... நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை!

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதிமுக-விற்கு ஒரு கலவையான முடிவைத் தந்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (மே 6) சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் அதிமுக 53 இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதா அல்லது ஒரு வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்படுவதா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிமுக-வின் கோட்டையாகக் கருதப்படும் சில தொகுதிகளில் ஏற்பட்ட தோல்விகளுக்கான காரணங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும், சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பது மற்றும் மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசுக்குத் தர வேண்டிய அழுத்தம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தலைமைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai